பொள்ளாச்சி குற்றவாளிகள் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

பொள்ளாட்சி வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் இன்று போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 | 

பொள்ளாச்சி குற்றவாளிகள் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

பொள்ளாட்சி வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் இன்று போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்ததோடு, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரீஷ்,வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

தொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், பலதரப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தியதையடுத்து, டிஜிபி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் பொள்ளாட்சி வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குண்டாஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றகோரி உள்துறை செயலாளர் விண்ணப்பித்தார்.

பின்னர் தமிழக அரசே வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றாமல் சிபிசிஐடி அதிகாரிகளே விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கை சிறப்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம்  ஏப்ரல் 22 வரை 4 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் மதியம் 1 மணியளவில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் இன்று சென்னைக்கு விசாரணைக்காக ஆஜராக உள்ளதால் அப்பகுதியில்  கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP