பொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, வீடியோ எடுத்த வழக்கில் கைதானவர்கள் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வீடியோ அண்மையில் வெளியானது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் கீழ் உள்ளனர். இவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மணிவண்ணனிடம் மேற்கொண்ட விசாரணையில், 5 பேரும் இணைந்து பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதையும், அதனை படம் பிடித்து வைத்து தொடர்ந்து வன்கொடுமை சம்பவங்களை நடத்தியதையும் மணிவண்ணன் வாக்குமூலமாக அளித்துள்ளார். 

இதனடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து, கூடுதலாக பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP