சிறுவனைக் கொன்ற அரசியல் பிரமுகர்! திருச்சியில் பரபரப்பு!

பன்றி விற்பனை போட்டியில் சிறுவன் கொடூர கொலை..
 | 

சிறுவனைக் கொன்ற அரசியல் பிரமுகர்! திருச்சியில் பரபரப்பு!

திருச்சியில் பன்றி இருக்கும் இடத்தைக் காட்டியதால் 12 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்த அலியார் என்பவரின் மகன் அப்துல் வாஹித்(12).  ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது இடை நின்ற சிறுவர் கடந்த 3ஆம் தேதி முதல் காணவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து அவரது தாய் 6ஆம் தேதி அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அரசியல் பிரமுகர் கயல்விழி சேகரின் மகன் முத்துக்குமாரும், இளவரசனும் தனது மகனை பன்றி மேய்க்க சொல்லி ஏற்கனவே அடித்துள்ளதாகவும், எனவே அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக முத்துக்குமாரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையின் போது, பன்றிக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியானது. பன்றி பிடித்து விற்பனை செய்யும் தனது உறவினர் மகன் சிலம்பரசனுக்கு  அப்துல் வாஹித் உதவி உள்ளார். இதனால் அப்துலை பிடித்து மிரட்டி அனுப்ப தனது கூட்டாளிகளுக்கு தெரிவித்ததாக முத்துகுமார் விசாரணையின் போது தெரிவித்தார்.
சிறுவனைக் கொன்ற அரசியல் பிரமுகர்! திருச்சியில் பரபரப்பு!ஆனால் அவர்கள் தாக்கியதில் சிறுவன் அப்துல் உயிரிழந்ததாகவும், யாருக்கும் தெரியாமல் இருக்க தங்கள் கொட்டைகைக்கு பின் இருக்கும் 15 அடி ஆழமுடைய குப்பைகள் நிறைந்த இடத்தில் கல்லைக் கட்டி இறக்கியதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டனர். 
இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய வீராச்சாமி, லோகேஷ், சரவணன், கணேசன் ஆகிய 4 பேரை கைது செய்து உள்ளனர். இருப்பினும், உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக செயல்படும் பன்றி கொட்டகையை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP