விமானத்தில் யோகா செய்த பயணி - போலீஸ் விசாரணை

சென்னை விமானநிலையத்தில் பயணி ஒருவர் விமானத்திற்குள் யோகா செய்து மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதையடுத்து அவர் இறக்கிவிடப்பட்டார்.
 | 

விமானத்தில் யோகா செய்த பயணி - போலீஸ் விசாரணை

சென்னை விமானநிலையத்தில் பயணி ஒருவர் விமானத்திற்குள் யோகா செய்து மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதையடுத்து அவர் இறக்கிவிடப்பட்டார். 

சென்னையில் இருந்து கொழும்பு செல்லவிருந்த விமானத்தில் ஏறிய இளைஞர் குணசேனா, திடீரென யோகா செய்ய ஆரம்பித்துள்ளார். மேலும், சக பயணிகளுக்கு  தொல்லை கொடுக்கும் விதமாக அவர் யோகா, உடற்பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விமான அதிகாரிகள் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக நடந்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை விமானத்தில் இருந்து இறக்கி விட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவன அதிகாரிகள் அவரின் டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுத்தது. இதையடுத்து போலீசார் குணசேனாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP