வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆய்வாளர் திடீர் மரணம்!

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திடீர் மரணம்..
 | 

வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆய்வாளர் திடீர் மரணம்!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மற்றும் 30-ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை டவுன் புதுகார்கானா தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் (58). காவல் ஆய்வாளரான இவர் 
திருவண்ணாமலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில், காவல் ஆய்வாளரான முருகதாஸ் வாக்கு மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார். திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆய்வாளர் திடீர் மரணம்!இங்கு நேற்று இரவு முருகதாஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் இருந்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே முருகதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP