சென்னையில் போலீஸ் கெடுபிடி - தலைமறைவான கஞ்சா விற்பனையாளர்கள்!!

சென்னையில் போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டை காரணமாக, கஞ்சா விற்பனையாளர்கள் பலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
 | 

சென்னையில் போலீஸ் கெடுபிடி - தலைமறைவான கஞ்சா விற்பனையாளர்கள்!!

சென்னையில் போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையினால், கஞ்சா விற்பனையாளர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் அதிரடி தேடுதல் வேட்டையினால், சென்னை மற்றும் அதன் சுற்றுபுறப் பகுதிகளில் கஞ்சா விற்பனை பெரிதளவில் குறைந்து காணப்படுகிறது. சென்னையில் விற்கப்படும் பெரும்பாலான கஞ்சா பொருட்கள் விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திரபிரதேச மாநிலத்தின் பிற பகுதிகளி்ல் இருந்து வருவதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் சென்னை பிரிவு அதிகாரி ப்ருனோ கூறுகையில், "கஞ்சா விற்பனை செய்து ஜெயில் சென்று திரும்பியவர்களையும் நாங்கள் பின் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.  எங்களுடைய தேடுதல் வேட்டை காரணமாக கஞ்சா விற்பனையாளர்கள் பலர் தலைமறைவாகியுள்ளனர்.

அதன் காரணமாக தற்போது கஞ்சா விற்பனை குறைந்துள்ளது. இப்போது இரயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  எனவே ரயில் நிலையங்களையும் எங்கள் கண்காணிப்பு வளயைத்திற்குள் கொண்டு வந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

Newstm.in

 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP