ராசிபுரத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த குற்றவாளிகள் இருவரை போலீசார் பிடிக்க முயற்சி செய்தபோது, துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், ஒருவர் காயமடைந்தார். ஆனால், இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர்.
 | 

கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் காரில் துரத்திச் சென்றனர். வழிமறித்து போலீசார் சோதனை செய்தபோது, அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர். அவர்களை பிடிக்க போலீசார் துரத்திச் சென்றனர்.

போலீசிடம் இருந்து தப்பிக்க ராசிபுரத்தின் அலவாய்பெட்டி வழியாக சென்றுள்ளார் கடத்தல் காரர்கள். வழி தெரியாமல் அவர்கள் நிற்க போலீஸ் அதிகாரிகள் நெருங்கினர். அப்போது கடத்தல்காரர்கள், போலீசாரை நோக்கி அரிவாளால் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், ஒருவர் காயமடைந்தார். ஆனால், இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP