வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு!

சேலத்தில் வளர்ப்பு பிராணியை மர்ம விலங்கு கடித்து கொன்ற ஆத்திரத்தில் இறைச்சியில் விஷம் கலந்து தெருவில் வீசியதன் விளைவால் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழந்தன.
 | 

வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு!

சேலத்தில், வளர்ப்பு பிராணியை மர்ம விலங்கு கடித்து கொன்ற ஆத்திரத்தில், இறைச்சியில் விஷம் கலந்து தெருவில் வீசியதன் விளைவால் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழந்தன. 

 சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் பகுதியில் வசிப்பவர் குமார். இவர் வளர்த்து வந்த ஆட்டை மர்ம விலங்கு கடித்து கொன்று விட்டது. இந்த ஆத்திரத்தில் மீண்டும் விலங்குகள் வராமல் இருக்க தெருக்களில், குருணை மருந்தை இறைச்சியுடன் கலந்து வீசியுள்ளார். இதை அப்பகுதியில் திரியும் வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை, பன்றி, பறவைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உண்டு இறந்து கிடந்தன.

வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு!

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரை பெற்ற காவல்துறையினர் இது குறித்து குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP