பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 20 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட‌ சேலம்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகளின் அடிப்படையில், 18 -ஆவது இடத்தில் இருந்த சேலம் மாவட்டம், 20 - ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
 | 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 20 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட‌ சேலம்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர்,சேலம் மாவட்டத்தில் 18,197 மாணவர்கள், 21,025 மாணவிகள் என மொத்தம் 39,222 பேர் தேர்வு எழுதியிருந்தனர்.

 இதில் மாணவர்கள் 16,132 பேர், மாணவிகள் 19,417 பேர் என மொத்தம் 35,549 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.64 என கூறினார். மேலும், இதில் மாணவர்கள் 88.65%, மாணவிகள் 92.35% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 20 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட‌ சேலம்

இதன் மூலம், 20 -ஆவது இடத்தில் சேலம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில், சேலம் மாவட்டம் 18 -ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP