Logo

கங்கை கிணற்றில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் இன்று விடியற்காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவிரியிலும், மடத்தில் உள்ள கங்கை கிணற்றிலும், புனித நீராடி வழிபட்டனர்.
 | 

ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதம், அமாவாசையன்று, இந்த மடத்தில் உள்ள கங்கை கிணற்றில் இருந்து கங்கை நீர் ஊற்றெடுப்பதாக ஐதீகம். அமாவாசை தினமான இன்று பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், முதலில் காவிரி ஆற்றில் புனித நீராடிவிட்டு பின்னர் ஸ்ரீஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் உள்ள கங்கை கிணற்றிலும், புனித நீராடினர்.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஸ்ரீதர ஐயாவாள் திருவுருவத்திற்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

இம்மடத்தில் உள்ள கிணற்றில் கார்த்திகை மாத அமாவாசையன்று மட்டும் கங்கை நீர் பிரவாகமெடுக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் புனித நீராடினால் பாவங்கள் தீர்ந்து, புண்ணியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP