குற்றால அருவியில்  குளிக்க அனுமதி! 

தென்மேற்கு பருவமழையினால் கோவை குற்றாலம் ஓரளவிற்கு நீர் வரத்தைப் பெற்றுள்ளதோடு, சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், 108 நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
 | 

குற்றால அருவியில்  குளிக்க அனுமதி! 

கடும் வறட்சியின் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி  கோவை குற்றாலம் சுற்றுலாப் பகுதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  மேலும், பருவமழை பொய்த்துப் போனதால், குற்றாலத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது.

அதோடு சூழலில் வனப்பகுதிகளில் கடும் வறட்சி  நிலவுவதால், கோவை குற்றாலம் உள்பட பல்வேறு நீர்நிலைகளைத் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் வரத் தொடங்கின. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்த சூழலைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பகுதி சீரமைப்பு மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையினால் கோவை குற்றாலம் ஓரளவிற்கு நீர்வரத்தைப் பெற்றுள்ளதோடு, சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், 108 நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் பொதுமக்களின் விருபத்திற்கிணங்க இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP