உயிரினங்கள் வாழத்தகுதியற்ற ஊராக மாறும் நெகமம் கள்ளிப்பட்டிப்புதூர்... வேதனையோடு வாழும் மக்கள்

வாழத்தகுதியற்ற ஊராக மாறும் நெகமம் கள்ளிப்பட்டிப்புதூர், அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆசியரிடம் புகார்
 | 

உயிரினங்கள் வாழத்தகுதியற்ற ஊராக மாறும் நெகமம் கள்ளிப்பட்டிப்புதூர்... வேதனையோடு வாழும் மக்கள்

வாழத்தகுதியற்ற ஊராக மாறும் நெகமம் கள்ளிப்பட்டிப்புதூர், அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆசியரிடம் புகார்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் நெகமம், பொள்ளாச்சி பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தேங்காய் மட்டை, மஞ்சியை எடுத்து கட்டிகளாக செய்து அயல்நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட மைதானத்தின் மையப்பகுதியில் காயிர் பித் கட்டிகளை பயன்படுத்துகின்றனர். தென்னை விவசாயம் செழித்திருக்கும் இப்பகுதியில் காயிர் பித் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாகியதால், விவசாய நிலங்களை,  ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் என குத்தகைக்கு எடுத்து காயிர் பித் துகள்களை கொட்டி வருகின்றனர்.

அரசிடம் இலவச மின்சாரத்தை வாங்கிக்கொண்டு  தொழிற்சாலைகள், காயிர் பித் துகள்கள் மீது தண்ணீரை அடித்து விடுகின்றனர். மேலும் மழை காலங்களில் காயிர் பித் மீது விழும் தண்ணீரும் நிலத்தடி நீரோடு கலந்து விடுகிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து மனிதன் முதல் விலங்குகள் வரை பயன்படுத்த முடியாமல் போகும் சூழ்நிலை பொள்ளாச்சி பகுதிகளில் உருவாகிவிட்டது. 

உயிரினங்கள் வாழத்தகுதியற்ற ஊராக மாறும் நெகமம் கள்ளிப்பட்டிப்புதூர்... வேதனையோடு வாழும் மக்கள்

நெகமம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட, கள்ளிப்பட்டி புதூரில், கிணற்றில் தண்ணீர் இருந்தும், குடிக்க  முடியாமல், காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் அவலத்தில் உள்ளனர். தென்னை விவசாயம் செழித்த இப்பகுதியில், தேங்காய் மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் காயிர் பித்தே தென்னை மரங்களின் வளர்ச்சியை தடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட விவசாய தோட்டத்து வீடுகள் இருக்கின்றன.

கிணற்றில் இருக்கும் தண்ணீரில் அமிலம் மற்றும் உப்புத்தன்மை மழை காலங்களில் 900 TDSம் , வெயில் காலங்களில் 1500 TDs ம் இருப்பதால்,  குடிக்கவும், குளிக்கவும், கால்நடைகளுக்கு பயன்படுத்தவும் முடியாமல், காசு கொடுத்து  தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த நீரை பயன்படுத்தினால்,  கண் எரிச்சல் , சரும நோய்கள், பல்கரை, நுரையீரல் பிரச்சனைகள்,  காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நான்காண்டுகளாக இந்த பிரச்சனை குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், இதுவரை அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இம்மக்களின் ஆதங்கமாக உள்ளது.

உயிரினங்கள் வாழத்தகுதியற்ற ஊராக மாறும் நெகமம் கள்ளிப்பட்டிப்புதூர்... வேதனையோடு வாழும் மக்கள்

 மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று நடத்தப்படுகிறதா, என்பதே! சந்தேகமாக இருப்பதாகவும், மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். விவசாயம் பாதிக்கப்பட்ட மக்கள் குடிக்கும் நீரையாவது அரசு குழாய் மூலம்  வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

கள்ளிப்பட்டிபுதூரில் இருந்து, குடிநீர் குழாயை 2 கிலோ மீட்டர் தொலைவில் குடியிருக்கும்,100 குடும்பங்களுக்கு  வழங்க வேண்டும்.  மாசடைந்த நிலத்தடி நீரால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காயிர் பித் தயாரிக்கும் நிறுவனங்கள் நீர் மற்றும்  காற்று மாசு ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேற்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP