நெல்லை: பெண்கள் விடுதியில் மாயமான 4 மாணவிகள் மீட்பு

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே பெண்கள் விடுதியில் இருந்து மாயமான 4 மாணவிகளை போலீசார் மதுரையில் மீட்டுள்ளனர்.
 | 

நெல்லை: பெண்கள் விடுதியில் மாயமான 4 மாணவிகள் மீட்பு

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே பெண்கள் விடுதியில் இருந்து மாயமான 4 மாணவிகளை போலீசார் மதுரையில் மீட்டுள்ளனர். 

குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்த பாலின் ரோஸ் ஜெமிமா(47) என்பவர், அந்த பகுதியில் மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது விடுதியில் 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். விடுதி நடத்தி வரும் பாலின் ரோஸ் ஜெமிமாவின் மகள் ஜெஸ்பா எஸ்தர் (12) மற்றும் அங்கு தங்கி படித்து வந்த மணிமேகலை(14), மரிய லிவ்யா (15), அபிநயா (16) ஆகியோர் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், 4 மாணவிகளும் நன்றாக படிக்காமல் அடிக்கடி விளையாடி வந்ததால், விடுதி கண்காணிப்பாளர் ஜெமிமா, மாணவிகளை கண்டித்துள்ளார். மேலும், தனது மகள் ஜெஸ்பா எஸ்தருடன் பழக கூடாது என்றும் சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மன வருத்தமடைந்த மாணவிகள் 4 பேரும் நேற்று அதிகாலை ஒன்றாக விடுதியை விட்டு வெளியேறி மாயமாகியுள்ளனர். வழக்கம் போல் ஜெமிமா காலையில் மாணவிகளை பள்ளிக்கு தயார்படுத்திய போது 4 பேரும் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். மாணவிகள் எங்கும் கிடைக்காததால் இது குறித்து குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவிகளையும் தேடி வந்தனர்.

மேலும், மாயமான 4 மாணவிகளின் புகைப்படங்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று மாயமான மாணவிகள் மதுரை யானைக்கால் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். அவர்களை கண்ட அப்பகுதி பொது மக்கள் நீங்கள் யார் என விசாரித்துள்ளார்கள். அப்போது அவர்கள் நாங்கள் குற்றாலம் விடுதியில் தங்கி படிப்பதாகவும் தற்போது அங்கிருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் விடுதிக்கு தகவல் அளித்தனர். ஜெமிமா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து போலீசார் நேற்றிரவு அங்கு சென்று மாணவிகளை மீட்டனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP