சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை பையில் வைத்து சாலையோரத்தில் போட்டு சென்றுள்ள சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை மீட்ட காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 | 

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை பையில் வைத்து, மர்ம நபர்கள் சாலையோரத்தில் போட்டு சென்றுள்ள சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் காஜாமலை முஸ்லீம் 2 வது தெருவை சேர்ந்த ஷாஜஹான் என்பவர், இன்று காலை 5.30 மணியளவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அவர் சத்தம் எங்கிருந்து வருகிறது என கவனித்தபோது, சாலையோரத்தில் இருந்த பையில் இருந்து கேட்டுள்ளது. உடனே அந்த பையை திறந்து பார்த்தப்போது, அதில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை இருந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷாஜஹான், கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் அளித்தார். விரைந்து சென்று குழந்தையை மீட்ட காவல்துறையினர், அக்குழந்தையை கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவை குழந்தைகள் மையத்தில்  ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP