திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இதய நோயாளிக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தம்!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முதன் முறையாக இதய துடிப்பு குறைந்த நோயாளிக்கு பேஸ் மேக்கர் (pace maker) கருவி பொருத்தப்பட்டுள்ளது.
 | 

திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இதய நோயாளிக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தம்!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முதன் முறையாக இதய துடிப்பு குறைந்த நோயாளிக்கு பேஸ் மேக்கர் (pace maker) கருவி பொருத்தப்பட்டுள்ளது. 

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜமால் முஹம்மது (55). இவர் உடல் நல குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் இதய துடிப்பு குறைந்து அபாயக்கட்டத்திற்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மூலம்  இதய துடிப்பை சீராக வைக்கும் pace maker கருவி பொருத்தப்பட்டது.

திருச்சி  அரசு மருத்துவமனையில் முதன் முறையாக  இந்த பேஸ் மேக்கர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு மருத்துவமனைக்கு  சென்று நேரில் பாராட்டினார். இந்த சந்திப்பின் போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இதய சிகிச்சை பிரிவு பேராசிரியர் பாலசுப்ரமணியன்,  தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டது என்றும், இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் இது அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார். மேலும், முதன்முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் இது மேற்கொள்ளப்பட்டது என்றார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சியில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 253 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.  இந்த ஆண்டு அக்டோபர் 15 வரை 230 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின்பு நலமுடன் உள்ளனர். தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்ட  4 பேர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் கிராமபுறங்களை விட மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் டெங்கு பாதிப்பு சற்று கூடுதலாக உள்ளது. மாவட்டம் முழுவதும் 32 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP