விற்பனைக்கு வைத்திருந்த வெங்காயம் திருட்டு-கொள்ளையர்கள் அட்டகாசம்

விற்பனைக்கு வைத்திருந்த வெங்காயம் திருட்டு-கொள்ளையர்கள் அட்டகாசம்
 | 

விற்பனைக்கு வைத்திருந்த வெங்காயம் திருட்டு-கொள்ளையர்கள் அட்டகாசம்

பெரம்பலூர் அருகே விவசாய நிலத்தில் விற்பனைக்கு கொண்டுசெல்ல வைக்கப்பட்டிருந்த 400 கிலோ வெங்காயம் திருடுபோனது. 
நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருந்த நிலையில் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் வெங்காய திருடும் சம்பவமும் நடைபெற்றது.

விற்பனைக்கு வைத்திருந்த வெங்காயம் திருட்டு-கொள்ளையர்கள் அட்டகாசம்

வெங்காயம் திருடியதாக சில இடங்களில் தாக்குதல், சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில் பெரம்பலூர் அருகே விவசாயி ஒருவரது வயலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் ரூ. 60 ஆயிரம்  மதிப்பிலான 400 கிலோ சின்ன வெங்காயத்தை தனது வயலில், பட்டறை அமைத்து வைத்திருந்தார். விற்பனைக்கு எடுத்துச் செல்ல விவசாய நிலத்தில் வெங்காயத்தை சேர்த்து வைத்திருந்தார். ஆனால் அதனை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதை அறிந்த சக்திவேல் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அவர் அளித்த புகார் அடிப்படையில் வெங்காயத் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP