Logo

ரயிலில் ஏற முடியாமல் பயணிகள் தவிப்பு.. டிக்கெட்டை ரத்து செய்த அதிகாரிகள்..

சேலம் ரயில் நிலையத்தில் காரைக்கால் ரயிலில் பயணிகள் ஏற முடியாததால், ரயில் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப அளித்தனர்.
 | 

ரயிலில் ஏற முடியாமல் பயணிகள் தவிப்பு.. டிக்கெட்டை ரத்து செய்த அதிகாரிகள்..

சேலம் ரயில் நிலையம் வந்த காரைக்கால் ரயிலில் பயணிகள் ஏற முடியாததால், ரயில் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

சேலம் சுந்தர் லாட்ஜ் பகுதி அருகே  டவுன் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு நேற்று பகல் 1 .30 மணியளவில் பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் காரைக்கால் விரைவு பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் பயணிகள் ஏற முயன்றனர். 

சில பெட்டிகளில் வாலிபர்கள் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு பயணிகளை ரெயிலில் ஏற விடாமல் தடுத்தனர். இதனால் பயணிகளுக்கும் படிக்கட்டில் அமர்ந்து இருந்த சில வாலிபர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ரயில் புறப்பட்டது.

ரயிலில் ஏற முடியாததால் பாதிக்கப்பட்ட பயணிகள் பலர் டிக்கெட் கவுண்டருக்கு சென்று, கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்களால் ரயிலில் ஏற முடியவில்லை என்றும் சிலர் படிக்கட்டில் அமர்ந்து பயணிகளை ஏற விடவில்லை எனவும் கூறி டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப தருமாறு கேட்டனர்.

ஆனால் டிக்கெட் விற்பவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் பயணிகளுக்கும்  டிக்கெட் விற்பனையாளருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்த டவுன்  ரயில்வே நிலைய அதிகாரிகள் அங்கு வந்து ரயில் பயணிகளிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிறகு டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை கொடுத்தனர்.

இதனை அடுத்து ரயிலில் செல்ல இருந்த பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த வழியே சென்ற பேருந்துகளில் ஏறி சென்றனர். இதனால் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP