காவலர் உடையில் சில்மிஷம் செய்த அதிகாரிகள்!

போலீஸ் உடையில் தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 | 

காவலர் உடையில் சில்மிஷம் செய்த அதிகாரிகள்!

போலீஸ் உடையில் தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கோவை கருமத்தம்பட்டி காவல்நிலையத்தை சேர்ந்த பெண் காவலரும்,  ஆண் காவலரும் காவல் உடையில் தகாத முறையில் நடந்து கொண்ட நிகழ்வு ஒன்று சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சோமனூர் புறக்காவல்நிலையத்தில் பாதுகாப்பு பணியின் போது காவல்நிலையத்திலேயே இருவரும் தவறாக நடந்து கொண்டதாக தகவல் பரவியது. 

இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் தனிப்பட்ட ஒரு இடத்தில் இவ்வாறு தவறாக நடந்து கொண்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் காவலர் உடையில் தவறாக நடந்து கொண்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும்  கோவை மாவட்ட காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP