மருத்துவர் இல்லாமல் பிரசவம் பார்த்த செவிலியர்: குழந்தை உயிரிழப்பு

திருச்சி, அந்தநல்லூர் சுகாதார மையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர் மட்டுமே பிரசவம் பார்த்தால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் சுகாதார மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

மருத்துவர் இல்லாமல் பிரசவம் பார்த்த செவிலியர்: குழந்தை உயிரிழப்பு

திருச்சி, அந்தநல்லூர் சுகாதார மையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர் மட்டுமே பிரசவம் பார்த்தால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் சுகாதார மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி பவித்ராவை நேற்றிரவு 9 மணி அளவில் பிரசவத்திற்காக அந்தநல்லூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

அப்போது, அங்கு பணியில் இருந்த செவிலியர் மருத்துவர் இல்லாமலே பிரசவம் பார்த்ததாகவும், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தைக்கு இதயத்துடிப்பு குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரசவம் பார்த்த செவிலியர் மருத்துவரின் பரிந்துரை மற்றும் உத்தரவு இல்லாமலே குழந்தையின் உறவினர்களிடம் குழந்தையை கொடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்து செல்லும்படி கூறியுள்ளார். 

உடனடியாக உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்ட போது, ஆம்புலன்ஸ் வர அரை மணி நேரம் ஆகும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கார் பிடித்து உடனே திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது என தெரிவித்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று மதியம் முற்றுகையிட்டனர்.  இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.  பின்னர் ஸ்ரீரங்கம் தாசில்தார் சுப்பிரமணி ஜீயபுரம் காவல்துறை ஆய்வாளர் பன்னீர்செல்வம் சுகாதாரத் துறையை சார்ந்த அலுவலர்கள் அவர்களிடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதேபோல் கடந்த மாதம் ஜூலை 2ம் தேதி பெருகமணி கிராமத்தில் இதே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP