அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை

நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி 5 மாதம் ஆகியும் வீரகனூர் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத அவலநிலை நீடித்து வருகிறது.
 | 

அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை

நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி 5 மாதம் ஆகியும் வீரகனூர் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத அவலநிலை நீடித்து வருகிறது. 

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள லத்துவாடி ஊராட்சிக்குட்பட்ட ராஜகோபாலபுரம் என்ற கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டபொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களின் வசதிக்காக  கடந்த 1972ம் ஆண்டு இந்த பகுதியில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில்  50 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வந்தனர். தனியார் பள்ளியின் வரவால்  அரசு பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைய தொடங்கியது.        

தற்போது பள்ளியில் வெறும் 8 மாணவ, மாணவிகளே படித்து வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர்கள் கூட சேராத நிலையில் இந்தாண்டும் பள்ளி தொடங்கப்பட்டு 5 மாதம் ஆகியும் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூடசேராத அவல நிலை நீடித்து வருகிறது. தற்போது அரசு பள்ளியானது 2 ஆசிரியர்கள், 2 சத்துணவு சமையலர் மூலம் 2ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான 8 மாணவர்களை கொண்டு இயங்கி வருகிறது. 

அரசு தனியார் பள்ளியில் 25 சதவிகித இடஒதுக்கீடு அளித்து அதற்க்கான கட்டணத்தை அரசு செலுத்திவிடுவதால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். தனியார் பள்ளிக்கு அரசு கொடுக்கும் கட்டணத்தை அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கொடுத்தால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை கூடும் என்றும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடையே தனியாக ஒருகுழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதோடு, இதே நிலை நீடித்தால் கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளை எல்லாம் மூடும் அவல நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்கள்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP