நீலகிரி: அவலாஞ்சி அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

அவலாஞ்சி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 | 

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படவுள்ளது. இன்று இரவு 9 மணிக்குள் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் இன்னொசன்ட் திவ்யா,  குந்தா, பில்லூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP