நியூ இயர் பார்ட்டி! நட்சத்திர விடுதிகளுக்கு புதிய கட்டுபாடு!

புத்தாண்டு அன்று நள்ளிரவு ஒரு மணியோடு புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது எனவும் சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
 | 

நியூ இயர் பார்ட்டி! நட்சத்திர விடுதிகளுக்கு புதிய கட்டுபாடு!

புத்தாண்டு அன்று நள்ளிரவு ஒரு மணியோடு புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என நட்சத்திர விடுதிகளுக்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக நட்சத்திர விடுதிகளுக்கு சென்னை காவல்துறை புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில், புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியோடு முடித்துக் கொள்ள வேண்டும். பெண் வாடிக்கையாளர்களை கையாள்வதற்கு பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். நீச்சல் குளம் அருகே புத்தாண்டு கொண்டாட ஏற்பாடுகள் செய்யக் கூடாது. நீச்சல் குளத்தில் குளிக்கவோ விளையாடவோ நட்சத்திர விடுதிகள் அனுமதிக்கக் கூடாது. அதிகம் மது அருந்தியவரை பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க கால் டாக்சி நிறுவனங்களுடன் இணைந்து முன்னதாகவே தேவையான கார்களை ஏற்பாடு செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP