சேலம் கல்லூரியில் புத்தாண்டு கொண்டாட்டம்!

சேலம் தனியார் மகளிர் கல்லூரியில் 2019 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரம்மாண்ட கேக் வெட்டி ஆடல் பாடல் என கல்லூரி மாணவிகள் அசத்தியுள்ளனர்.
 | 

 சேலம் அம்மாபேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மகளிர் கலைக் கல்லூரியில் 2019 ம் ஆண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏவிஎஸ் கல்லூரி குழுமத்தின் சேர்மன் கைலாஷ் கல்லூரி மாணவிகளுடன் பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடினர் தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை பார்வையாளர்கள் மத்தியில் வெளிப்படுத்தி அசத்தினர். 

இதேபோல் சேலம் அயோத்தியாபட்டனம் பகுதியில் இயங்கிவரும்  கல்லூரியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் பிரமாண்ட கேக் வெட்டி ஆடல் பாடல் என அசத்தினர். 

சேலம் கல்லூரியில் புத்தாண்டு கொண்டாட்டம்!

மேலும் 2019 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் சேலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கொண்டாட்டங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் புத்தாண்டு வேளையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரளான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP