மணல் குவாரி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி

கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே அரசு மணல் குவாரி அமைப்பது தொடர்பான அரசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் தோல்வியில் முடிவடைந்தது.
 | 

மணல் குவாரி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி

கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே அரசு மணல் குவாரி அமைப்பது தொடர்பான அரசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் தோல்வியில் முடிவடைந்தது. 

தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம், கபிஸ்தலம் அருகே நடுப்படுகை கொள்ளிடம் ஆற்றில் அரசின் சார்பில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக வட்டாச்சியர் அலுவலகத்தில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் அனந்த பத்மநாபன், மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ், கபிஸ்தலம் சரக ஆய்வர் ஜெயமதி, திருவைகாவூர் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் உட்பட அரசு அதிகாரிகளும், சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, மணல் குவாரி அமைக்கப்பட்டால், வாழ்வாதாரம் மற்றம் நீர் வளங்கள் பாதிக்கப்படும் எனவும் ஆகையால் இந்தப் பகுதியில் மணல் குவாரி அமைப்பதை அரசு தடுத்து நிறுத்தி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என  பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தனர். மேலும் பொதுப்பணித் துறையினரால் தற்போது நடைபெற்று வரும் மராமத்துப் பணிகளும் பேச்சு வார்த்தை முடியும் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP