Logo

வேளாண்மை துறை சார்பில்  தேசிய உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்தி!

கோவை மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - ஊட்டச் சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் பிரச்சார விழிப்புணர்வு ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 | 

2019-2020 ஆம் நிதியாண்டில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் ஊட்டச் சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை கோவை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது இதன்படி இதற்கான பிரச்சாரம் விழிப்புணர்வு ஊர்திகளை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 ஊட்டச் சத்து மிக்க சிறுதானிய பயன்கள், சாகுபடி தொழில்நுட்ப முறைகள் குறித்து ஒலிபெருக்கி வாயிலாகவும், சிறு கையேடுகளாகவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப் பிரச்சாரமானது துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சார வாகனமானது அனைத்து கிராமங்களிலும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆனது துவக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சிறுதானியங்களின் பயன்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வட்டார வேளாண்மை அலுவலர்கள் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP