நாகை: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை!

நாகை மாவட்டத்தில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
 | 

நாகை: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை!

நாகை மாவட்டத்தில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள உத்திரங்குடி பகுதியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு ஜனனி (8), ஜெயமித்ரன் (3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், தேவி  தனது குழந்தைகள் இருவரையும் அருகில் உள்ள குட்டையில் வீசி கொன்று விட்டு அவரும்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், குடும்ப பிரச்சனை காரணமாக தேவி குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP