மணப்பாறை அருகே மர்ம விலங்குகள் அட்டகாசம்!

மணப்பாறை அருகே நள்ளிரவில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகள் காலை உயிரிழந்த நிலையில் கிடந்தன. நள்ளிரவில் காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து ஆடுகள், கோழிகளை வேட்டையாடுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 | 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம், சுக்காம்பட்டி, கணவாய்ப்பட்டி ஆகிய பகுதிகளில் குறுமலை, பாலமலை உள்ளிட்ட  பல்வேறு மலைகள் தொடர்ச்சியாக உள்ளன. மலைச்சரிவுகளில் உள்ள வனப்பகுதிகளில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இரவு நேரங்களில் வனப்பகுதியில் அருகில் உள்ள தங்களது தோட்டங்களில் பட்டி அமைத்து அதில் ஆடுகளை அடைத்து வைத்து வருகின்றனர்.

மணப்பாறை அருகே மர்ம விலங்குகள் அட்டகாசம்!

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மலைப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரங்களில் வரும் மர்ம விலங்குகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடுகளை கழுத்துப்பகுதியில் கடித்து அதன் ரத்தத்தை உறிஞ்சிவிட்டு சென்று விடுகின்றன. இதுவரை மர்ம விலங்குகளால் குறுமலை, சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகியுள்ளன. 

புத்தாநத்தம் அருகே கணவாய்ப்பட்டியில் விவசாயி பெருமாள் (69) என்பவற்றின் தோட்டத்தில் 60க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உள்ளன. அவற்றில் 7 செம்மறி ஆடுகள் இன்று இறந்த நிலையில் கிடந்தன. மேலும், படுகாயமடைந்த 8 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தற்போது மழையின்றி விவசாயமும் பொய்த்துப்போய் விட்டநிலையி, கால்நடைகளை வளர்த்தாவது பிழைக்கலாம் என்ற நிலையில் அதற்கும் ஆபத்து வந்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார். எனவே மர்மவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP