மதமாற்றத்தை கண்டித்த பா.ம.க., பிரமுகர் வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே, திருப்புவனத்தில், ஹிந்துக்களை, முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர்களிடம், அவர்களின் செயலை கண்டித்து பேசிய, பா.ம.க., முன்னாள் நிர்வாகி ராமலிங்கம், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 | 

மதமாற்றத்தை கண்டித்த பா.ம.க., பிரமுகர் வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே, திருப்புவனத்தில், ஹிந்துக்களை, முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர்களிடம், அவர்களின் செயலை கண்டித்து பேசிய, பா.ம.க., முன்னாள் நிர்வாகி ராமலிங்கம், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

கும்பகோணத்தை அடுத்த, திருப்புவனத்தை சேர்ந்தவர், ராமலிங்கம், 45; பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நிர்வாகி. திருப்புவனத்தின் சில பகுதிகளில், முஸ்லிம்கள், அங்குள்ள ஹிந்துக்களை மதம் மாற்றம் முயற்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முஸ்லிம்களின் இந்த மதமாற்ற முயற்சிக்கு, ராமலிங்கம் கடும் கண்டனம் தெரிவித்து வந்தார். அங்குள்ள முஸ்லிம்களிடம் சென்று பேசிய அவர், ‛‛ஹிந்துக்கள் ஒருபோதும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்லர்; நாங்கள் எங்கள் கடவுளை வணங்குகிறோம், நீங்கள் உங்கள் அல்லாவை வணங்குங்கள். ஆனால், மத மாற்றம் செய்வதை கைவிடுங்கள். 

உங்களுடன் பள்ளிவாசலுக்கு வந்து, தொழுகையில் ஈடுபட நான் தயார்; நீங்கள் ஹிந்துக் கடவுளை ஏற்பீர்களா? நாங்கள் கடவுளுக்கு படைத்த பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடுவீர்களா? நாங்கள் அனைவரோடும் ஒருங்கிணைந்து வாழ தயார். மக்கள் மத்தியில் நீங்கள் தான் பிரிவினையை ஏற்படுத்துகிறீர்கள்’’ என ராமலிங்கம் பேசியுள்ளார். 

தவிர, அங்குள்ள முஸ்லிம் ஒருவரின் குல்லாவை எடுத்து, தன் தலையில் அணிந்து கொண்டு, அவரின் நெற்றியில் விபூதியை பூசி விட்டுள்ளார். ராமலிங்கத்தின் இந்த செயல், முஸ்லிம் மதவாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

ராமலிங்கத்தின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத சில மதவாதிகள், அவரை கொல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

அதன் படி, நேற்று ராமலிங்கத்தை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள், அவரின் கை, கால் என, உடல்களின் பல பாகங்களில் அரிவாளால் வெட்டினர். 

 

மதமாற்றத்தை கண்டித்த பா.ம.க., பிரமுகர் வெட்டிக் கொலை

 

பின், அங்கிருந்து தப்பிச் சென்றனர். படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமலிங்கம், சிகிச்சை பலனின்றி இறந்தார். ராமலிங்கம் கொல்லப்பட்டதற்கு, பா.ம.க., மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஊர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் பலரும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மதமாற்றத்தை கண்டித்த பா.ம.க., பிரமுகர் வெட்டிக் கொலை

முஸ்லிம்களின் மத மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமலிங்கத்தை, பி.எப்.ஐ., எனப்படும் ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பை சேர்ந்தாேர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார்,  தலைமறைவான கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

ராமலிங்கம் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்களை உடனடியாக கைது செய்யும் படி கோரிக்கை விடுத்து, திருப்புவனத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP