கொலை வழக்கில் ஆஜராக ஊருக்கு வந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

மணப்பாறை அருகே கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கொலை வழக்கில் ஆஜராக ஊருக்கு வந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

மணப்பாறை அருகே கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குமாரவாடி அருகே உள்ள தொப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 35). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில் சுரேஷ் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவ்வபோது தொப்பாநாயக்கன்பட்டி வந்து செல்வார்.

இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு ஒருவரை கொலை செய்தார். இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று இந்த வழக்கு விசாரணை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், சுரேஷ் தொப்பாநாயக்கன்பட்டிக்கு வந்துள்ளார்.  இந்நிலையில், அன்னசமுத்திரம் அருகே கோமாளி ஆறு பகுதியில் உள்ள மரத்தில் சுரேஷ் சேலையால் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.

இறந்த நிலையில் சுரேஷ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து  வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சுரேஷ் மனஉளைச்சலால் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP