மலை ரயில் போக்குவரத்து மேலும் 5 நாட்களுக்கு ரத்து: தெற்கு ரயில்வே

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் ஜந்து நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
 | 

மலை ரயில் போக்குவரத்து மேலும் 5 நாட்களுக்கு ரத்து: தெற்கு ரயில்வே

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் ஜந்து நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆங்கிலேயரால் துவங்கி இன்று வரை அதன் பழமை மாறாமல் இயக்கப்படுவதால் இந்த மலை ரயிலில் பயணிக்க உள்நாடுகள் மட்டுமின்றி ஏராளாமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ரயில் பாதையில் கல்லார் முதல் குன்னூர் வரை மலைக்காடுகள் அமைந்துள்ளதால் பருவமழை காலங்களில் அவ்வப்போது ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படுவது வழக்கம். இதனால் மலை ரயில் போக்குவரத்தானது அடிக்கடி இரண்டு, மூன்று நாட்கள் தடைப்படும். ஆனால் இவ்வாண்டு வெளுத்து வாங்கிய வட கிழக்கு பருவமழையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள், பாறைகள் ரயில் பாதையில் விழுந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏழு முறைக்கு மேல் தடைப்பட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி ஹில்கிரோ ஆடர்லி ரயில் நிலையம் இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றதால் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று மீண்டும் வழக்கம் போல் மலை ரயில் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 23 இடங்களில்  மன்சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து ரயில் பாதை தடைப்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்தானது மேலும் ஜந்து நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் வரும் 29ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரகாலமாக மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP