மலைபோல் குவியும் குப்பை: நோய்களின் பிறப்பிடமாகும் அரசு மருத்துவமனை!

மணப்பாறை அரசு மருத்துவமனையில் மலைபோல் தேங்கி நிற்கும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றாததால் நோய் தொற்றும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
 | 

மலைபோல் குவியும் குப்பை: நோய்களின் பிறப்பிடமாகும் அரசு மருத்துவமனை!

மணப்பாறை அரசு மருத்துவமனையில் மலைபோல் தேங்கி நிற்கும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றாததால் நோய் தொற்றும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை, பாரதியார் நகரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி உள்ளிட்ட ஒன்றியங்கள் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தோகைமலை, விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

தினமும் 1300 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் உள்நோயாளிகளாக 250க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவைகளில் நடைபெறும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் தான் அளிக்கப்பட்டு வருகின்றது

மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பிணவறை அருகே குவித்து வைக்கப்படும். அந்த குப்பைகளை கண்ணுடையான்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் தான் வந்து எடுத்துச் செல்வார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் குப்பை மலைபோல் குவிந்தாலும் கூட ஊராட்சி நிர்வாகம் அதைப்பற்றி கண்டுகொள்வதே இல்லை. மருத்துவமனை தரப்பில் இருந்து பலமுறை அழைத்துச் சொன்னாலும் கூட அதைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை.

தற்போது குப்பை மலை போல் குவிந்துள்ள நிலையில் மழையும் பெய்து வருவதால் குப்பையில் இருந்து மழைநீர் கழிவுநீராக மாறி மருத்துவமனை வளாகத்திற்கு வரும் நிலை இருப்பதுடன் கடும் துர்நாற்றமும் வீசி வருகின்றது. இதனால் மருத்துவமனைக்கு ஏற்கனவே சிகிச்சை பெற வரும் நோயாளிகள்  நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் தற்போது வரை குப்பையை அகற்ற முன்வரவில்லை, ஒவ்வொரு முறையும் குப்பைகள் மலை போல் தேங்குவதும் அதை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகத்திடம் போராடி அகற்ற வேண்டிய நிலையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

மழைகாலம் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் நோய் தொற்றுகளின் பிறப்பிடமாக அரசு மருத்துவமனையே மாறி வருவது அனைவரையும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP