பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை ஒன்று அங்குள்ள பங்குனி குளக்கரை பகுதியில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
 | 

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர். அந்த குழந்தை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிபட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. 

பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை

இந்நிலையில் பெற்ற குழந்தையை ஒரு சில மணி நேரத்தில் குளத்தில் யாரேனும் கடத்தி வந்து வீசினார்களா? அல்லது தகாத உறவினால் கர்ப்பமடைந்து பிறந்த குழந்தையை, பெற்ற தாயே வீசி சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP