செத்துப்போகச் சொன்ன தாய்! ‘காதலனிடம் கடைசியாக  பேசிய இளம்பெண்! சோகத்தில் தோழிகள்!

அனுஷியாவின் மரணம் தற்கொலை இல்லை.. கொலை என அவரது தோழிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

செத்துப்போகச் சொன்ன தாய்! ‘காதலனிடம் கடைசியாக  பேசிய இளம்பெண்! சோகத்தில் தோழிகள்!

செத்துப்போகச் சொன்ன தாய்! ‘காதலனிடம் கடைசியாக பேசிய இளம்பெண்! சோகத்தில் தோழிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த ரெத்தினசாமியின்  மகள் அனுஷியா (18). இவர் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி வீட்டில் அனுஷ்யா விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்டார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் தனது மகள் அனுஷியா கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து 2000 ரூபாயை திருடிவிட்டதாகவும், அதற்காக திட்டியதால் எலி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அனுஷியாவின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் அனுஷியாவின் மரணம் தற்கொலை இல்லை.. கொலை என அவரது தோழிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களிடம் அனுஷியா ஒரு போதும் சந்தோஷங்களை பகிர்ந்துக் கொண்டதில்லை என்றும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு அவரின் தாய், அனுஷியாவை வீட்டில் அடைத்து, காதலுக்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாக அனுஷியா, அவரது காதலனுடன் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில், தனது தாய் தன்னிடம் பேசும் போதெல்லாம் ‘செத்துப்போ’ என கூறுவதாகவும், அதனால் தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாகவும், நான் தற்கொலை செய்துக் கொண்டால் நீ என்ன செய்வாய் என்றும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனுஷியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து போலீசார் தீவர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது தோழிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP