மர்ம விலங்குகளின் அட்டகாசத்தால்  100 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

கால்நடைகளை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு இதுபோன்று மர்ம விலங்குகளின் அச்சுறுத்தல் வேதனை ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே ஆடுகளை கொல்லும் மர்ம விலங்கு எது என்பதைக் கண்டறிந்து உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

மர்ம விலங்குகளின் அட்டகாசத்தால்  100 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள முத்தழகம்பட்டியைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 50) இவருக்கு சொந்தமான தோட்டம் குமரி கட்டி மலையடிவாரத்தில் உள்ளது. தோட்டத்தில் ஆடு மாடு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல நேற்று இரவு ஆடு, மாடுகளை தனது தோட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்ததால் வீட்டுக்கு சென்றுள்ளார் துரைசாமி.

பின்னர் இன்று காலை தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது நான்கு ஆடுகள் மற்றும் அவர் வளர்த்த நாய் உள்ளிட்டவை  இறந்த நிலையிலும்,  9 ஆடுகள் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும்  பார்த்து அதிர்ச்சி அடைந்தார் துரைசாமி. 

மர்ம விலங்குகளின் அட்டகாசத்தால்  100 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். மேலும் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வந்து காயமடைந்த ஆடுகளுக்கு  சிகிச்சை அளித்தனர். இந்த பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்துள்ளது.

மர்ம விலங்குகளின் அட்டகாசத்தால்  100 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. விவசாயம் பொய்த்து விட்ட நிலையில் கால்நடைகளை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு இதுபோன்று மர்ம விலங்குகளின் அச்சுறுத்தல் வேதனை ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கும்  தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே ஆடுகளை கொல்லும் மர்ம விலங்கு எது என்பதைக் கண்டறிந்து உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP