சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்! அதிர்ச்சியடைந்த வருமானதுறை அதிகாரிகள்!

சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்! அதிர்ச்சியடைந்த வருமானதுறை அதிகாரிகள்!
 | 

சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்! அதிர்ச்சியடைந்த வருமானதுறை அதிகாரிகள்!

சென்னை கேகே நகர் ஈஎஸ்.ஐ மருத்துமவமனை வளாகத்தின் அருகே மர்மமான முறையில் நிறைய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்து அதிர்ந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார்,  பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இந்தப் பணம் திருவள்ளூரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்குச் சொந்தமான பணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் சென்னையில் இருக்கும் வியாபாரிகளிடம் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை வாங்கிக் கொண்டு கேரளா சென்று 10 ரூபாய் மற்றும் சில்லறை நாணயங்களாக  மாற்றித் தரும் தொழிலைச் செய்து வந்ததாகவும், கேரளாவில் இருந்து தனியார் பேருந்து மூலம் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய் கட்டுக்களும், சில்லறைகளும் வந்ததாகவும் குறிப்பிட்டார்.

பின்னர், தன்னை அழைத்துச் செல்ல வரவேண்டிய கார் வருவதற்கு தாமதமானதால், மருத்துவமனை வளாகத்தில் மூட்டைகளை வைத்து விட்டு, காருக்காக காத்திருந்ததாகவும் அய்யப்பன் தெரிவித்தார். இதனையடுத்து போலீசாரும் மூட்டைகளை ஆய்வு செய்த போது, அந்த மூட்டைகளில்  20 லட்சம் ரூபாய்க்கு 10 ரூபாய் நோட்டுகளும், 7 லட்சம் ரூபாய்க்கு சில்லறைகளும் இருந்ததை  கண்டுபிடித்தனர்.

இந்தப் பணம் அய்யப்பனுக்குச் சொந்தமானது என்று அவர் தரப்பில் போலீசாரிடம் தெரிவித்தாலும் பணத்தை அவரிடம் வழங்காமல் வருமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  உரிய ஆவணங்களைக் காட்டி வருமான வரித்துறையிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு காவலர்கள் அய்யப்பனிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து மூட்டைகளில் இருந்த பணம், கணக்கில் வராத பணமா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP