பணம்பட்டுவாடா: அமமுக கட்சி உறுப்பினர் கைது!

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அமமுக கட்சியை சேர்ந்த ஒருவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 | 

தமிழகத்தில் 17வது மக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்ணச்ச நல்லூர் அருகே உள்ள தில்லாம்பட்டி கிராமத்தில் அதிமுக கட்சி சார்பாக சேகர் என்பவர் வாக்களர்களுக்கு பணம்பட்டுவாடா செய்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்தனர். 

அவரிடமிருந்து ரூ.2,700 கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர்,  சேகரை மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP