சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட அமைச்சர்!

கோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 | 

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட அமைச்சர்!

கோவையில் சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உடனடியாக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு தேர்தல் பிரச்சாரம் முடிந்து சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலை விபத்தில் சிக்கி காயங்களுடன் கிடந்தார். 

இதை கண்ட அமைச்சர், காரில் இருந்து இறங்கி சென்று அவரை மீட்டதுடன், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு கட்சி நிர்வாகிகளிடம் கூறினார். இதையடுத்து நிர்வாகிகள், அவரை தாங்கள் வந்த காரில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP