திருச்சி மாவட்டத்தில் குடிமராத்துப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

திருச்சி மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியம் கரையாம்பாளையம் கிராமத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குட்டை தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.
 | 

திருச்சி மாவட்டத்தில் குடிமராத்துப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

திருச்சி மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியம் கரையாம்பாளையம் கிராமத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  குட்டை தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதா அவர்களின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு விவசாயத்திற்கென்று அதிக அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்தும், அதிக முக்கியத்துவம் அளித்தும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

கிராமங்கள் தோறும் சிறுபாசன குளங்கள், குட்டைகள் மற்றும் ஊரணிகள் போன்ற நீர் நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள 5,000 சிறுபாசன குளங்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் 25,000 குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ஒரு லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணிகள் கூடுதல் சிறப்பு நிதியிலிருந்து ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் உள்ள 5,000 சிறுபாசன குளங்கள் தலா ரூ.5.00லட்சம் மதிப்பீட்டிலும் 25,000 குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ரூ.2.00லட்சம் மதிப்பீட்டிலும் நீர் உள்ளே வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அமைப்புகள் ஏற்படுத்தவும், தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ரூ.750.00 கோடி செலவிலும் மொத்தமாக ரூ.1250.00கோடி செலவில் சிறுபாசன குளங்கள் குட்டை மற்றும் ஊரணிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்வதுடன் தங்கள் பகுதிகளின் நிலத்தடி நீரைத் தேங்கச் செய்யும் வகையில் மழைநீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பருவ மழை காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிப்பதன் மூலம்  விவசாயிகள் பயன்பெறலாம்" என கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP