172 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார் அமைச்சர்!

கும்பகோணத்தை அடுத்த அய்யம்பேட்டையில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு 172 பயனாளிகளுக்கு 2 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
 | 

172 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார் அமைச்சர்!

கும்பகோணத்தை அடுத்த அய்யம்பேட்டையில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு 172 பயனாளிகளுக்கு 2 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

கும்பகோணத்தை அடுத்த  அய்யம்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் நகர நிலவரி திட்டத்தின்  சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி  மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, 2 கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 600 மதிப்பீட்டில்,172 பயனாளிகளுக்கு குடும்ப வீட்டுமனைப் பட்டா வழங்கினார். மேலும் 11 லட்சத்து 39 ஆயிரத்து 392 ரூபாய் மதிப்பீட்டில் விவசாய உபகரணங்களும்,சில மாதங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி காணாமல் போன பழனிச்சாமி குடும்பத்தாருக்கு அமைச்சர் அவரது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் நிதியும் வழங்கினர். .

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 45 ஆண்டுகால பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வீட்டு மனைபட்டா ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் குடந்தை கோட்டாட்சியர் வீராசாமி, நகர நிலவரித் திட்ட அலுவலர் சுசீலா, பாபநாசம் வருவாய் வட்டாட்சியர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், அறிவானந்தம், வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, பாபநாசம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன் உட்பட அரசு அதிகாரிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP