மெட்ரோ ரயிலில் இன்று முதல் கட்டணம் வசூல்!

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 நாட்களாக இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 | 

மெட்ரோ ரயிலில் இன்று முதல் கட்டணம் வசூல்!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னை அண்ணா சாலை டிஎம்எஸ்-லிருந்து, வண்ணாரப்பேட்டை வரை செல்லும் மெட்ரோ ரயிலின் கடைசி தடத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிறு அன்று திறந்துவைத்தார். இதையொட்டி, பயணிகளை ஈர்க்கும் வகையில் சென்னை மெட்ரோவில் பயணிகள் இரண்டு நாட்களுக்கு இலவசமாக பயணிக்கலாம், என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து, இலவச பயணம் மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டது. 

இதனால், பயணிகளின் வருகை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அலை மோதியது. நேற்று மட்டுமே 2 லட்சத்து 53 ஆயிரத்து 31 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று முதல் மெட்ரோவில் பயணிக்க கட்டணம் வசூல் செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP