ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை: இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 | 

மேற்கு வங்க மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிரகாஷ் மற்றும் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி, 8 வயது மகன் ஆகியோர் தீவிரவாத கும்பலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை கண்டித்தும், உத்தரபிரதேசத்தில் பத்து நாட்களில் பாஜக இந்து மகாசபா பிரமுகர்கள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும், கிருஷ்ண பகவானை அவதூறாக பேசிய சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் இந்து மக்கள் கட்சி  மாநில செயலாளர் பாலா தலைமையில் கும்பகோணம், காந்தி பூங்கா அருகில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  உரிய நடவடிக்கை எடுக்காத மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் உருவ படத்தை தீயிட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP