கோவை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாவோயிஸ்ட்டுக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட்டை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

கோவை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாவோயிஸ்ட்டுக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட்டை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாவோயிஸ்ட்கள் மறைந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது, சேம்பு கரையிலிருந்து பெருமாள் முடி அடிவாரம் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில், துப்பாக்கியுடன் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். இதனை கண்ட சிறப்பு அதிரடிப்படை போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது, தப்பியோடியுள்ளனர். 3 பேரில் ஒருவர் மட்டும் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து போலீசாரிடம் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பிடிபட்ட அந்த நபரை மீட்டு வீரபாண்டி  அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட நபர் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த தீபக் என்பதும், இவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், இவரது உண்மை பெயர் சந்துரு என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் தன்னை சீனிக் என்றும் தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்லி வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள "ரெட் ஜோனில்" சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை இன்று அதிகாலை ஒரு மணியளவில் நேரில் சந்தித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சக்திவேல், வரும் 22 ஆம் தேதி வரை தீபக்கை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP