கோவையில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிப் படுகொலை

கோவை மாவட்டம், செட்டிபாளையம் அருகே மெக்கானிக் ஒருவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

கோவையில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிப் படுகொலை

கோவை மாவட்டம், செட்டிபாளையம் அருகே மெக்கானிக் ஒருவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட‌ சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த செட்டிப்பாளையம் மீனா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் (40). இவர் போத்தனூர் - செட்டிப்பாளையம் ரயில்வே கேட் அருகில் மெக்கானிக் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று வழக்கம்போல இவர்  பணி புரிந்து வந்தார். அப்போது, திடீரென சுமார் 11.30 மணியளவில், 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கடையில் இருந்த பரந்தாமனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், சம்பவம் நடந்தபோது கடையில் இருந்த பெண் ஊழியர், மற்றும் இரு ஆண் ஊழியர்களை மிரட்டி விட்டும் அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது. பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கொலை செய்ய வந்த மர்ம கும்பல் முதலில் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP