சென்னை: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் நடத்துனர் பலி!

சென்னை பாடி மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சென்னை: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் நடத்துனர் பலி!

சென்னை  பாடி மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் இருந்து கோயம்பேடு வந்த அரசு பேருந்து ஒன்று பாடி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துநர் வீரமுத்து என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 13 பேர் உடனடியாக மீட்கபட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP