கழிவறையில் பெண்களை வீடியோ எடுத்தவர் கைது!

கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
 | 

கழிவறையில்  பெண்களை வீடியோ எடுத்தவர் கைது!

கழிவறையில்  செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் 

தஞ்சாவூர் மாவட்டம் ஆவணம் பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர்  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். பெட்ரோல் பங்கில் உள்ள கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து பெண் ஊழியர்களை படம் எடுத்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று கழிவறையில் செல்போன் மறைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரபாகரன் தான் பெண் ஊழியர்களை வீடியோ எடுத்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP