மதுரை:காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை..

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த இளைஞரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 | 

மதுரை:காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை..

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த இளைஞரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர் தனது அண்ணன் ரஞ்சித்துடன் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு தொடர்பாக கையெழுத்திட இன்று காலை வந்துள்ளார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் அஜித்தை ஓட ஓட விரட்டி காவல் நிலையம் அருகே வைத்து கொடூரமாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த மற்றொருவர் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மாதம்  செல்லூர் பகுதியில் திருவிழாவின் போது விக்கி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளதும் அதன் காரணமாகவே இந்த படுகொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP