மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்களுக்கு கூழ் ஊற்றபட்டது. மேலும் விழாவை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
 | 

மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள, வண்டியூர் மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது வெள்ளியும், ஆடி கீர்த்தியையும் ஒருசேர வந்ததால், மதுரையில் உள்ள ஏராளமான பெண்  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை முதலே,  நீண்ட நேரம் வரிசையில் நின்று, அம்மனுக்கு நேர்த்திக்கடனாக மாவிளக்கு எடுத்தும், அங்கப் பிரதக்ஷணம் செய்தும் நெய் விளக்கு ஏற்றியும்,நேர்த்திக்கடன் செய்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில், இன்று காலை முதல், 1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்களுக்கு கூழ் ஊற்றபட்டது. மேலும், விழாவை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP