மதுரை: தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு

பாண்டேக்கும், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்திற்கம் என்ன சம்பந்தம்? மோடி, பாண்டேக்கு ஏதோ ஒரு மிஷன் கொடுத்துள்ளார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு...!
 | 

மதுரை: தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தும் அகில பாரத மாநாடு மதுரையில் நேற்று (ஜன.18)தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொண்ட வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நேற்று துவக்க உரையாற்றினார். நேற்று தொடங்கிய இந்த மாநாடு நாளை (ஜன.21) வரை மூன்று நாட்களுக்கு, மதுரையில் உள்ள ஆர்.எல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இன்று (ஜன.19) மாலை ஆர்.ரங்கராஜ் பாண்டே சிறப்புரையாற்றினார்.  அப்போது, ஆழ்வார்களும், சிவனடியார்களும் பிறந்த புண்ணிய பூமிஇது. ராமேஸ்வரம் திவ்ய தேசம்... என சிறிது நேரம் ஹிந்தியில் உரையாற்றிய பாண்டே, பின்னர் தனது வழக்கமான பாணியில் தமிழில் பேசத் தொடங்கினார். 

மதுரை: தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு

அவர் பேசியதாவது: பாண்டேக்கும், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்திற்கம் என்ன சம்பந்தம்? மோடி, பாண்டேக்கு ஏதோ ஒரு மிஷன் கொடுத்துள்ளார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. இந்த சுதேசி என்பது, மோடியோ, மோகன் பாகவத்தோ கூறவில்லை, நமது மோகன்தாஸ் காந்தி தான் ஆணித்தரமாக வலியுறுத்தினார். 

தாய் மண்ணைப் பார், தேசத்திற்க தொண்டு செய் என்பதை வலியுறுத்தும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தில் பங்கு கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சுதேசி என்பது சுதந்திர போராட்ட காலத்திற்கானது மட்டும் தேவைப்படும் ஒன்றல்ல. இந்த உணர்வு என்றும் நம் மனதில் இருக்க வேண்டும். 

வியாபாம் செய்ய வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை எதிர்த்து வியாபாரம் செய்யவே நம்முடைய வஉசி சுதேசி கப்பலை இயக்கினார். இன்று பன்னாட்டு கம்பெனிகள் நம்மை எல்லா வகையிலும் ஆக்கிரமிக்க துடிக்கின்றனர். நாம் எதனால், எப்படி, எதற்காக ஈர்க்கப்படுகிறோம் என்ற விழிப்புணர்வு தேவை. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்தேன். அங்கு எங்கும் ஆங்கிலம் இல்லை. ஆனால் அந்த தேசம் பிரம்மாண்ட வளர்ச்சியடைந்துள்ளது. 

மதுரை: தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு

நாம் இன்றும் அன்னிய மொழிக்கு அடிமைப்பட்டு, ஹிந்தி ஒழிக என்கிறோம். தாய்மொழியில் பயின்று, பேசுவது கூட சுதேசி தான். தாய்மொழியில் பயின்ற அப்துல் கலாம் போன்றோர் எத்தனை சாதனை படைத்துள்ளனர் என்பது நாம் பார்த்தவையே. 

பல நாடுகள் தங்கள் ராக்கெட்டை ஏவ அந்நிய நாடுகளின் உதவிகளை நாடுகிறது. ஆனால் நாம் எந்த அந்நிய நாட்டின்  உதவிகளும் இன்றி நாம் ராக்கெட்டுகளை ஏவி வருகிறோம். 

எனது பெரிய வருத்தம்... சமூக வலைதளங்கள் அனைத்தும் அந்நிய பன்னாட்டு கம்பெனிகள் வசம் உள்ளது. அதனால் அவர்கள் செய்யும் விஷய பிரச்சாரத்தை முடக்க இயலவில்லை. நமது பெரு நிறுவனங்கள், சுதேசி வலைதளங்களை உருவாக்க முன்வர வேண்டும். அதற்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ரங்கராஜ் பாண்டே பேசினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP