மதுரை: குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் நீர்!

மதுரையில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் ஆறுபோல் வீணாக சாலையில் ஓடிய காட்சி பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
 | 

மதுரை: குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் நீர்!

மதுரையில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்  ஆறுபோல் வீணாக சாலையில் ஓடிய காட்சி பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் முடக்கு சாலை பகுதியில் வைகையிலிருந்து அரசரடி நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் மெயின் குழாயில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக ஆறு போல் ஓடியது. தகவல் அறிந்து தாமதமாக வந்த மாநகராட்சி ஊழியர்கள், தலை அளவு தண்ணீரில் மூழ்கியபடி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி உடைப்பை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறிய காட்சி அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP