மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை!

மதுரை, திருமங்கலத்தில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரை மாணவர்கள் கண் முன்னே சரமாரியாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

இராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் குரு முனீஸ்வரன். இவருடைய மனைவி ரதிதேவி(35). இவர் திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஹர்ஷவர்தன்(6) ஹர்ஷவர்த்தினி(6) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த ஒரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று மாலை 3.30 மணியளவில், பள்ளிக்கு சென்ற குரு முனீஸ்வரன் காவலாளியிடம் அனுமதி பெற்று பள்ளியின் உள்ளே சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாணவர்கள் முன்னிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். 

மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர்  வெட்டிக் கொலை!

இதில் ரதிதேவி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த திருமங்கலம் நகர் காவல்நிலைய போலீசார் மற்றும் டிஎஸ்பி அருண் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பள்ளி அறையிலேயே மனைவியை குத்தி படுகொலை செய்த குரு முனீஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP